Please watch: "7G Cheating Challenge | Senjurvean"
➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vxsggU

Click & Cook | Coconut Paneer Curry | Vikatan Samayal

இளநீர் பன்னீர் கறி
தேவையானவை:
பன்னீர் - 200 கிராம், (சிறு துண்டுகளாக்கி எண்ணெயில் பொரித்தபின் தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். பின்னர் நன்கு தண்ணீரை பிழிந்து எடுத்த பின்னர் கிரேவியில் போட வேண்டும்.),
இளநீர் (இளநீரில் எடுத்த தேங்காய்களை சிறு சிறு துண்டுகளாக கட் செய்து போட்டு ஒன்றாக வைத்துக் கொள்ள வேண்டும்),
அரைத்த தேங்காய்,
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீ ஸ்பூன்.
மிளகாய் பவுடர் - அரை டீ ஸ்பூன்,
தேங்காய் பால், எண்ணெய் - தேவையான அளவு,
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது),
தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கியது),
கடுகு, கறிவேப்பிலை - தேவையான அளவு,
வரமிளகு, மல்லி, பட்டை சேர்த்து பொடியாக்கியது - ஒரு டீஸ்பூன் (மூன்றையும் பொன்னிறமாக வறுத்து பின்னர் பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும்.).

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கால் டீஸ்பூன் கடுகை போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் 2 போட்டு நன்கு வதக்க வேண்டும். பொன்னிறமாக வந்தபின் ஒரு டீஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது போட்ட பின் நறுக்கிய வைத்த தக்காளி போட வேண்டும். தேவையான உப்பு போட வேண்டும். அரை டீஸ்பூன் மிளகாய் பவுடர், வறுத்த மசலா கலவை ஒரு டீஸ்பூன் போட்டு வதக்க வேண்டும். மசாலா வதங்கிய பின் தேங்காய் பால் கலந்து கிரேவி பதமாக வரும் போது பன்னீரை போட்டு வதக்க வேண்டும். இளநீரும், தேங்காயும் கலந்த கலவையை போட வேண்டும். நன்கு கொதித்த பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் போட வேண்டும். நன்கு கொதித்த பின் எடுத்து விட வேண்டும்.

Subscribe to Vikatan Channel here...
https://goo.gl/1U8hGV